தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை! - corona updates

சேலம்: 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் வந்தவா்களுக்கு சேலம் காவல் துறையினர் நூதன தண்டனை வழங்கினா்.

சேலத்தில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை!
சேலத்தில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை!

By

Published : Mar 30, 2020, 12:26 PM IST

ஊரடங்கு உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்று காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், அஸ்தம்பட்டி அருகே ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் இருசக்கர வாகனகனங்களில் செல்வதைக் கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

மேலும், 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக, காவல் உதவி ஆணையர் ஆனந்த் குமார் அஸ்தம்பட்டி ரவுண்டானாவை, 25 முறை சுற்றிவர அறிவுறுத்தினார். இதையடுத்து, ’இனி யாரும் வெளியே வர மாட்டோம், வெளியே வர மாட்டோம்’ என கூறியபடியே மக்கள் ரவுண்டானாவை சுற்றி வந்தனர். அதன் பின்னர், காவல் துறையினர் மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விளக்கி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: உத்தரவை மதிக்காத கடைகள் - வருவாய்த்துறை போட்ட பூட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details