தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்தார்.
தீயணைப்பு நிலையங்களில் உள்ள உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சரியாக இயங்குகிறதா என்றும் நேரில் பார்த்து விளக்கங்கள் கேட்டறிந்தார். வெள்ளசேதம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளை எப்படி செய்வீர்கள் என்றும் தீயணைப்பு வீரர்களிடம் கேட்டறிந்தார்.