தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2020, 4:09 PM IST

ETV Bharat / state

சமய மாநாடு சென்றுவந்தவர்களுக்கு நெகட்டிவ்; வீட்டிலிருந்த 23 வயது பெண்ணுக்கு பாசிட்டிவ்! - மறைத்த அலுவலர்கள் மீது ஆக்ஷன்

சேலம்: சமய மாநாடு சென்றுவந்த குடும்பத்தினருக்கு கரோனா தொற்று இல்லை என்றபோதும் தனது 23 வயது மனைவிக்கு தொற்று பரவியதையும், மாநாட்டிற்குச் சென்றோர் குறித்த தகவல் தெரிவிக்காத சுகாதாரத்துறை ஆய்வாளர் மீதும், தலைநகர் போய் திரும்பியதை மறைத்த மற்றொரு உதவி செயற்பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் கூறினார்.

மறைத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை
மறைத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளரின் தந்தை, சகோதரர்கள் இருவர் தலைநகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் கடந்த மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் கலந்துகொண்டனர். அதன் பிறகு மார்ச் 23ஆம் தேதி அவர்கள் எடப்பாடி திரும்பினர். இதனிடையே சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்கும்படி சேலம் மாவட்ட நிர்வாகம் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளரின் தந்தை, சகோதரர்கள் இருவர் தலைநகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் கடந்த மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் கலந்துகொண்டனர். அதன் பிறகு மார்ச் 23ஆம் தேதி அவர்கள் எடப்பாடி திரும்பினர். இதனிடையே சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்கும்படி சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பொறுப்பான அரசுப் பதவியில் உள்ள சுகாதார ஆய்வாளரோ, தனது தந்தையும் சகோதரர்களும் சமய மாநாட்டிற்குச் சென்றதை மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இது குறித்த தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மூலம், கடந்த மார்ச் 29ஆம் தேதி சுகாதார ஆய்வாளரின் வீட்டிலிருந்த அனைவரையும் பரிசோதித்தனர்.

தொடர்ந்து அவரின் தந்தை, சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் மேட்டூரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தனர். மேலும் அவர்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதனிடைய ஏப்ரல் 6ஆம் தேதி சுகாதார ஆய்வாளர், அவரது மனைவி, தாய் ஆகிய மூவரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டன. இதில் சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய மூவர், சுகாதார ஆய்வாளர், அவரது தாய் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் சுகாதார ஆய்வாளரின் 23 வயது மனைவிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து ஆய்வாளரின் மனைவி, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மாநாடு சென்றுவந்தோரில் நெகட்டிவும், பாசிட்டிவும்

அதேபோல், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்துவரும் 42 வயதான உதவி செயற்பொறியாளர் ஒருவர் சமய மாநாட்டிற்குச் சென்றுவிட்டு மார்ச் 23ஆம் தேதி மேட்டூர் திரும்பியது தெரியவந்தது. மேலும் மார்ச் 24ஆம் தேதிமுதல் மார்ச் 30ஆம் தேதிவரை அவர் அனல்மின் நிலையத்திற்குப் பணிக்குச் சென்றுவந்துள்ளார். இவரும் சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விவரத்தை, மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் மூலம் மார்ச் 30ஆம் தேதிமுதல் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அவருடன் பணிபுரிந்த 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராமன், "தலைநகரில் நடைபெற்ற சமய மாநாட்டிற்குச் சென்று சேலம் திரும்பிய நபர்கள் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் மறைத்த சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர் ஆகிய இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details