தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் ஸ்ரீ ஆர்.பஸ்கரன் இன்று (நவ.30) சேலம் பிரிவுக்கு வருகை தந்தார். பின்பு சேலம் பிரிவின் எஸ் & டி துறை தொடர்பான பல்வேறு புதிய வசதிகளை தொடங்கி வைத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சேலம் பிரிவின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது, சேலம் பிரிவின் எஸ் & டி துறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.