சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரப் பகுதிகளை மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தீவிர டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு கொசு மருந்து தெளிக்கும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்பு ஒருங்கிணைந்த சுகாதார பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய அவர், தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றியும், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கு சென்று தூய்மை பணிகளை ஆய்வுகள் செய்தார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய ஆட்சியர் ராமன், நமது பகுதியை காய்ச்சல், நோய் தாக்கம் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். இந்த பணிகளில் ஏதாவது இடையூறுகள் இருந்தால் அவற்றை அலுவலர்களிடம் கூறி சரி செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் வீட்டருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.