ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொது மக்கள் போக்குவரத்துக்காக ரயில், பேருந்து சேவைகள் சேலம் வழித்தடங்களில் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சேலம், தர்மபுரி வழித்தடங்களில் புதிதாக ஐந்து சிறப்பு ரயில்களின் சேவை வரும் 30ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.
சேலம், தர்மபுரி வழித்தடங்களில் தீபாவளி சிறப்பு ரயில்கள்! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
சேலம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம், தர்மபுரி வழித்தடங்களில் புதிதாக ஐந்து சிறப்பு ரயில் சேவைகள் வரும் 30ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
தர்மபுரி வழியாகச் செல்லும் யஷ்வந்த்பூர்-கண்ணூர் ரயில், திருச்சி மார்க்கமாக செல்லும் சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தர்மபுரி மார்க்கமாக செல்லும் மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ், தர்மபுரி மார்க்கமாக செல்லும் தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ், பங்காருப்பேட்டை வழியாக செல்லும் கன்னியாகுமரி-பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்ற நிலையில் கரோனா பரவும் அபாயத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பயணம் பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தவுமே இந்த ரயில் சேவைகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.