தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்திற்குச் சிறப்பு ரயில்கள்! - Special trains passing through Salem

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மக்களின் பயன்பாட்டிற்காக நான்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

salem
salem

By

Published : Oct 23, 2020, 5:33 PM IST

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், சேலம் மார்க்கமாகச் செல்லும் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

மைசூரு மயிலாடுதுறை விரைவு ரயில், தூத்துக்குடி மைசூரு விரைவு ரயில், கொர்பா விரைவு ரயில், சபரி விரைவு ரயில் போன்ற நான்கு சிறப்பு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகத் தடைசெய்யப்பட்டிருந்த பல ரயில் சேவைகள் மீண்டும் தளர்வு காரணமாக செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது அறிவித்திருக்கும் முக்கியச் சேவைகள் மூலம் மக்கள் மேலும் பயனடைவார்கள் என ரயில்வே நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில சிறப்பு ரயில் சேவைகள் குறித்து இன்னும் சில தினங்களில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details