தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதிய விபத்து... தந்தை கண்முன்னே உயிரிழந்த மகள்! - சேலத்தில் தந்தை கண் முன்னே உயிரிழந்த மகள்

சேலம்: குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் தந்தையின் கண் முன்னே மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

lorry accident
லாரி மோதிய விபத்து

By

Published : Dec 2, 2019, 4:32 PM IST

சேலம் மாவட்டம் அழகாபுரத்திலிருந்து ஆட்டோ ஓட்டுனர் பழனிசாமி தனது குடும்பத்துடன் ஓமலூரில் நடைபெற்ற திருமணத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, டால்மியா நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோவின் பின் புறத்தில் லாரி மோதியதில் பழனிசாமியின் மகளான கனகா, ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அப்போது அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டிச் சென்ற பழனிசாமி, அம்மா சுசீலா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

லாரி மோதிய விபத்து

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்த கனகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் தந்தையின் கண்முன்னே மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details