தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடை குழி தோண்டப்பட்ட வழியில் ஆபத்தான பயணம் - etv bharat

சேலம் மூ‌ன்று ரோடு பகுதியில் பாதாள சாக்கடை குழி தோண்டப்பட்ட வழியில் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான பயணம்
ஆபத்தான பயணம்

By

Published : Aug 5, 2021, 4:52 PM IST

சேலம்: மூன்று ரோடு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று ரோடு முதல் ஏஆர்ஆர்எஸ் மல்டிப்ளெக்ஸ் வரை சாலை மூடப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் இந்தச் சாலையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால், இந்தச் சாலையில் பயணிப்பது அச்சம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஆனாலும், இதை பற்றி பொதுமக்கள் சிறிதும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. என்ன தடை விதித்தாலும் தாங்கள் பயணிப்போம் எனத் தொடர்ந்து அவ்ழியாக சென்று வருகின்றனர்.

ஆபத்தான பயணம்

அவ்வப்போது பொதுமக்கள் தவறி விழுவது, சாலை நெரிசலை ஏற்படுத்தி வருவது இன்னும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நடிகர் தனுஷ் சொகுசு கார் வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details