சேலம்:கருங்கல்பட்டி பகுதியில் உள்ள பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்துவருபவர் கணேசன். இன்று (நவம்பர் 23) காலை சுமார் 6.30 மணி அளவில் இவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் (Cylinder Blast) சிதறியுள்ளது.
இதில் ஐந்து வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடிப்பில் இடிபாடுகளில் சிக்கிய 10 வயது சிறுமி பூஜாஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டார். 14 பேர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.