தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்ட் டைம் ஜாப் தருவதாக கூறி ரூ.7.89 லட்சம் மோசடி.. 4 வங்கி கணக்குகளை முடக்கி சைபர் கிரைம் போலீசார் விசாரணை! - 4 வங்கி கணக்குகளை முடக்கிய போலீசார்

சேலத்தில் பகுதி நேர வேலை என கூறி பெண் பொறியாளரிடம் ஆன்லைனில் ரூ.7.89 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மோசடி சம்பந்தமான 4 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

சேலத்தில் பகுதி நேரம் வேலை தருவதாக கூறி ரூ.7.89 லட்சம் மோசடி
சேலத்தில் பகுதி நேரம் வேலை தருவதாக கூறி ரூ.7.89 லட்சம் மோசடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 10:37 PM IST

சேலம்: ஓமலூரை அடுத்தா காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவருக்கு, பகுதி நேர வேலை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வந்துள்ளது. இதை பார்த்த அப்பெண், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதில் ஆரம்ப பணியை முடித்து அனுப்பிய அப்பெண் 690 ரூபாய் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மறுமுனையில் பேசிய நபர் ஒருவர் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிகளவு ஊக்கத்தொகை தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய பெண் பொறியாளர் 7 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதற்கு ஊக்கத்தொகையாக ரூ.5,940 வந்துள்ளது. அதன்பின் எவ்விதமான தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. மேலும், சமந்தப்பட்ட நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர் இது குறித்து அப்பெண் பொறியாளர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஆன்லைனில் செலுத்திய 7 லட்சத்து 89 ஆயிரத்து 560 ரூபாயை மீட்டு தருமாறு தெரிவித்திருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 வங்கி கணக்குகள் பயன்படுத்தி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 4 வங்கி கணக்குகளில் உள்ள 8 லட்சத்து 73 ஆயிரத்து 584 ரூபாய் பணத்தை முடக்கினர். மேலும், அந்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்; "சமூக வலைதளங்களில் பகுதி நேரம் வேலை தொடர்பாக வரும் எவ்வித இணைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம். மேலும், பொதுமக்கள் இது போன்ற மோசடியில் இருந்து கவனமாக இருக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க:உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம் - மிட்செல் மார்ஷ் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details