தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sandalwood: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - சந்தனமரங்கள் சிங்கிபுரத்தில் வெட்டிக்கடத்தல்

ஆத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sandalwood theft near attur
sandalwood theft near attur

By

Published : Nov 29, 2021, 10:08 PM IST

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம்.
இவரது மகன் சத்தியானந்த். இவர் புதுடெல்லியில் தனியார் இரும்பு உருக்காலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் விவசாயத் தோட்டம் உள்ளது.

அத்தோட்டத்தில் சத்தியானந்தின் பெற்றோர் வசித்து வருகின்றனர். இந்த தோட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்த்து வந்துள்ளார். தற்போது அவருக்கு விடுமுறை என்பதால் அண்மையில் டெல்லியில் இருந்து வந்த சத்தியானந்த், சொந்த ஊரில் தங்கி உள்ளார்.

நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல்

இந்த நிலையில் இவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் நன்றாக வளர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர்.

இன்று (நவ.29) காலை தோட்டத்திற்குச் சென்ற சத்தியானந்தின் தந்தை, தோட்டத்தில் இருந்த சந்தன மரங்கள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் மகன் சத்தியானந்த் உடன் சென்று, அவர் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல் வாழப்பாடி வனத்துறை அதிகாரிகளிடமும் புகார் செய்தார்.

வெட்டப்பட்ட சந்தனமரங்கள்
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயத் தோட்டத்தில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details