இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவு கே.டி. ராஜ் கூறுகையில்," மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அளவில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.
நீட் தேர்வு விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரியினர் - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம் : மதுரையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்கா மரணத்திற்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் தற்கொலை சம்பவத்தை அடுத்து இன்று (செப்.12) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களின் தற்கொலைக்கு மத்திய அரசு தான் காரணம். கல்வியை கார்ப்பரேட் மையமாக்கிய மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு ரூபாய் 5 கோடி இழப்பீட்டுத் தொகையாக மத்திய அரசு வழங்க வேண்டும்'' என்றார்.
மேலும் இறந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்காவிற்காக மெழுகுவர்த்தி ஏந்தி நாங்கள் அஞ்சலியும் செலுத்தி இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.