தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஒரே தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு பல விலைகளை நிர்ணயித்துள்ளது’ - சிபிஐ முத்தரசன் - cpi tn state secretary mutharasan on vaccine rates

சேலம் : கரோனா தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய அரசிடம் நிலையான கொள்கை இல்லை என்றும், தடுப்பூசிக்கு பல விலைகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது நகைச்சுவையாக உள்ளது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

cpi-tn-state-secretary-mutharasan-on-vaccine-rates
cpi-tn-state-secretary-mutharasan-on-vaccine-rates

By

Published : Jun 13, 2021, 4:11 PM IST

சேலத்தில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மோடி அரசிடம் நிலையான கொள்கை இல்லை, ஒன்றிய அரசு நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி பெறும்போது மூன்று விலைகளை நிர்ணயித்துள்ளது.

ஆனால் அந்தத் தடுப்பூசியின் பயன் ஒன்றுதான். ஒன்றிய அரசின் செயல்பாடை பார்த்தால், தமிழ் சினிமாவில் வரும் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.

பிரதமர் மோடி காமெடி செய்து வருகிறார். ‌தடுப்பூசியின் பயன் ஒன்றுதான். ஆனால் அதற்கு பல விலைகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
தடுப்பூசி வழங்கும் அறிவிப்புகளை உடனடியாக செயல்பாடுக்கு கொண்டு வர வேண்டும். ஒன்றிய அரசு காஞ்சிபுரத்திலுள்ள ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை காலதாமதப்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க காட்டிவரும் ஆர்வத்தை, தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிக்க காட்டவில்லை.
ஒன்றிய அரசின் இந்தச் செயல், ’வைக்கோல் போரில் நாயை கட்டிப் போட்டது போல’ என்ற பழமொழியைபோல் உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான காலத்தில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

கரோனா தொற்று குறைந்து வருவதால் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதில் மக்கள் நலனுக்கு எது தேவையோ அந்த நடவடிக்கையை முதலமைச்சர் கண்டிப்பாக எடுப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆவின் பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details