தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கையை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கைகோரி சிபிஎம் புகார்

சேலம்: நடுரோட்டில் திருநங்கையை கொடூரமாக தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட திருநங்கையை சந்திக்கும் சிபிஎம் கட்சியினர்

By

Published : May 5, 2019, 3:36 AM IST

சேலம் மாநகர் முழுவதும் திருநங்கைகள் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு தொழிலைச் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இரவு சனா மற்றும் கண்ணகி ஆகிய இரண்டு திருநங்கைகளும் உணவு சாப்பிட்டு விட்டு சினிமா பார்க்கச் செல்வதற்காக காத்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட திருநங்கை

அந்த நேரத்தில், பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல், மஃப்டியில் வந்து அவர்கள் இருவரையும் வழிமறித்து சனா என்ற திருநங்கையிடம் பணத்தை கொடுத்து விபச்சாரத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி ஆட்டோவை வரவழைத்து அதில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு சனா மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆய்வாளர், பொதுமக்கள் முன்னிலையில் சனாவை கைத் தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். தப்பியோட முயன்ற சனாவின் காலைப் பிடித்து, தரதரவென சாலையில் இழுத்து சரமாரியாக தாக்குதல் நடத்திய அந்த ஆய்வாளர், அவரின் உடைகளை கிழித்து மானபங்கம் படுத்தியுள்ளார். இதனால், சனாவிற்கு கை, கால், கழுத்து, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை நேற்று அளித்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட திருநங்கை குற்றமே செய்திருந்தாலும் கூட அவரை கைதுசெய்து வழக்குப் பதிவு செய்வதுதான் சட்டம். ஆனால் சட்டத்திற்கு மாறாக அந்த காவல்துறை அலுவலரின் அத்துமீறிய செயலால் மனித உரிமை மீறல் நிகழ்வை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, எனவே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உடனிருந்த காவலர்கள் மீது உரியா நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள திருநங்கை சனாவை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் பிரவின்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details