தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்! - pongal 2024

Mattu Pongal in Salem: வேளாண்மைக்கு மூலாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சேலத்தில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சேலத்தில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
சேலத்தில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 12:02 PM IST

சேலத்தில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்

சேலம்: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளான நேற்று, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில், பொங்கல் படையலிட்டு விவசாயிகள் வணங்கினர்.

அதனைத் தொடர்ந்து, 2ஆம் நாளான இன்று உழவுக்கு உயிரூட்டி, வேளாண்மைக்கு உதவியாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக, மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சேலம் குரும்பப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களின் செல்லப் பிள்ளையாகவும், உயிர்த் தோழானாகவும் இருந்து உழைத்த கால்நடைகளைப் போற்றி நன்றி கூறும் வகையில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ணப் பொடிகள் பூசி அழகு சேர்த்தனர்.

பின்னர், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தனர். மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறுகையில், “எங்களுடைய தாத்தா காலத்திலிருந்து மாட்டுப் பொங்கல் திருநாள் கொண்டாடி வருகிறோம்.

வேளாண்மைக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், இன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு விவசாயியும் இந்த தைத்திருநாளில் கால்நடைகள், பயிர்களுக்கு படையலிட்டு, சூரியனை வழிபட வேண்டும்.

தலைமுறைகள் பல கடந்தும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விவசாயிகளுக்கு இன்று உரிய ஆதார விலை, அவர்களின் விளை பொருள்களுக்கு கிடைக்காமல் இருப்பதால், அவர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்து வருகின்றனர். விவசாயத்தைக் காப்பாற்றும் வகையில், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம், அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"நாடாளுமன்ற தேர்தல் திமுகவிற்கு பாடமாக அமைய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details