தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக வெகுவாகக் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா நோய் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறியப்பட்டு, அப்பகுதிவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளால், நாள்தோறும் 300 முதல் 400 வரை இருந்த கரோனா எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.