தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 நாள்களுக்குப் பிறகு செலுத்தப்பட்ட தடுப்பூசி: அதிகாலை முதல் காத்திருந்த மக்கள்!

சேலத்தில் எட்டு நாள்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி முகாம்கள் செயல்படத் தொடங்கின. இதில், அதிகாலை மூன்று மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

covid vaccine camps
அதிகாலை முதல் காத்திருந்த மக்கள்

By

Published : Jul 12, 2021, 1:49 PM IST

சேலம்:கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் மூலம், பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 3ஆம் தேதி 138 மையங்கள் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து எட்டு நாள்களாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டன.

தடுப்பூசி செலுத்தும் பணி

இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜூலை.11) சென்னையில் இருந்து சேலத்திற்கு தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 138 மையங்களில் இன்று (ஜூலை.12) தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

காத்திருந்த மக்கள்

இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டு நாள்களுக்குப் பிறகு தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில், அதிகாலை மூன்று மணி முதலே பொதுமக்கள்ஆர்வத்துடன்நீண்ட வரிசையில் காத்திருந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்

இன்று போய் நாளை வா!

குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படுவதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு வாரத்திற்குப் பிறகு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியிருந்தாலும், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளன. கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை. இதனால் கோவாக்சின் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுமார் 37 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details