கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறி நடைபயிற்சி... அபராதம் விதித்த அலுவலர்கள் - கரோனா வைரஸ்
சேலம்: ஊரடங்கை மீறி நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி சேலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி, யோகா உடற்பயிற்சி மேற்கொண்ட நபர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் , முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்ததோடு, இதுபோன்று ஊரடங்கை மீறி நடைபயிற்சி மேற்கொண்டால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
இதையும் பார்க்க: கர்ப்பிணி வீட்டில் காவல் துறையினர் அடாவடி!