சேலத்தில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொங்கும் பூங்கா வளாகம், ஐந்து கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பல்நோக்கு அரங்குகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் இன்று ஆய்வுசெய்தார்.
இது தொடர்பாக ஆணையாளர் கூறுகையில், "சேலம் மாநகராட்சி நான்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகரப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து, அரசின் அனுமதி பெற்று, இத்திட்டத்தின்கீழ் 965 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதனடிப்படையில், அஸ்தம்பட்டி மண்டலத்திற்குள்பட்ட கோட்டம் எண்.14 தொங்கும் பூங்கா வளாகத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.