சேலம் மாவட்டம் ஓமலூரில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானியங்கள் உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அரங்கனூர் உழவர் நற்பணிமன்றம், ஓமலூர் அன்னை அறக்கட்டளை சார்பில் ஓமலூர், அரங்கனூர் பகுதிவாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நோக்கில் கொள்ளு, அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய நிவாரண பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
சிறுதனியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கிய மாவட்ட நிர்வாகம் சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதனையடுத்து ஓமலூர் அருகேயுள்ள அரங்கனூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு குறிஞ்சி உழவர் மன்றம் சார்பில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முக் கவசம் அணிந்துகொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் உதவி - சேவா பாரதி அமைப்பினர் அசத்தல்