சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கோட்ட மேலாளர் கெளதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சேலம் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல. அதுதொடர்பாக பரவி வரும் வீடியோக்கள் பழையது. சமூக வலைத்தளங்களில் உலா வரும் பொய்யான வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் அதனைப் பரப்பவும் வேண்டாம்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித கூட்ட நெரிசலும் இல்லை. மக்கள் மத்தியில் பீதியை யாரும் ஏற்படுத்த வேண்டாம். கரோனா வைரஸ் நோய் தடுப்பு நெறிமுறைகள் முழுமையாக இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. பயணிகளின் வருகை, ரயில் நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.