சேலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், கடந்த 10 நாள்களில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 150க்கு மேல் உயர்ந்துள்ளது.
ஊழியர்களுக்கு கரோனா: நகைக் கடைகள் மூடல்! - நகைக் கடைகள் மூடல்
சேலம்: நகைக் கடை ஊழியர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில் நகைக் கடைகள் மூடப்பட்டன.
தற்போது சேலம் மாவட்டத்தில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சேலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் கடைவீதி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஜூவல்லரி கடைகளில் பணியாற்றும் நான்கு விற்பனையாளர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் கடைவீதி பகுதியிலுள்ள நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.