சேலம் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
எனினும், இதுவரை சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் நோய்த்தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலை இருந்தது.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி ஏற்காட்டுக்கு பெங்களூருவிலிருந்து பெண் ஒருவர் வந்துள்ளார். இந்தப் பெண், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் எந்த ஒரு பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் ஏற்காட்டிற்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர் ஏற்காடு காய்கறி சந்தை, இறைச்சிக் கடைகளுக்கும் சென்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஏற்காட்டில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.