கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலத்தில் 600க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில்,சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் கவனிக்காததால், பல மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர். ஒரு சில நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறும் காட்சிகள் வாடிக்கையாகியுள்ளது.
அபாயகரமான கட்டத்தில் உள்ள நோயாளிகளை மருத்துவர்கள் கவனிக்காததால் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள மரத்தடியில் படுத்து உறங்குகின்ற நிலை உருவாகியுள்ளது. அதேபோல் சேலம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததாலும், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையாலும் கரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை: தொடரும் அவலம் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘பூ உதிர்ந்தது’ - பிரபல பாடகர் கோமகன் மறைவு