தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று சிகிச்சையில் குணமடைந்தோர் வீடு திரும்பினர் - கரோனா தொற்று சிகிச்சை

சேலம்: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Jun 7, 2020, 3:04 AM IST

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சேலத்திற்கு தொழிலாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர் . அவர்களை மாவட்ட எல்லையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்கின்றனர். நோய்த்தொற்று அறிகுறி கொண்டவர்கள் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர் .
இந்த நிலையில் ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 84 பேர் நேற்று ( ஜூன் 6) சிகிச்சை முடிந்து நலமடைந்த நிலையில் வீடு திரும்பினர் .
அவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பூங்கொத்து கொடுத்தும் சித்த மருந்துகள், கபசுர குடிநீர் பாக்கெட்டுகள், மாத்திரைகள் கொடுத்தும் வழி அனுப்பிவைத்தார். இதில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் நிர்மல் சன் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் பூங்கொத்து இனிப்பு வழங்கி பாராட்டினார். தற்போது 60 நபர்கள் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details