இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மொபைல் ஃபோன் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க மாநிலத் தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், "கரோனா நோய்த் தொற்று பொதுமக்களுக்கு பரவிடாமல் இருக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்திவருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன.
’மொபைல் கடைகளை திறக்க அனுமதி வேண்டும்’ - மொபைல் கடைகளை திறக்க அனுமதி வேண்டும்
சேலம்: ஊரடங்கு உத்தரவில் மொபைல் ஃபோன் கடைகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மொபைல் ஃபோன் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மொபைல் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் -தமிழ்நாடு மொபைல் போன் விற்பனையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்!
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு மொபைல் ஃபோன் மிகச் சிறந்த ஊடகமாக தற்போது விளங்கிவருகிறது. எனவே மொபைல் ஃபோன் கடைகள், ரீசார்ஜ் செய்யும் கடைகள், மொபைல் பழுது பார்க்கும் கடைகள் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் திறக்க அனுமதிக்கயளிக்க அரசு முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க...தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு