நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பல்வேறு பகுதிகளில் பரவி வருகின்றது . இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சேலத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளை எவ்வாறு மருத்துவ பரிசோதனை ஆய்வு செய்வது என்பது குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட துணை இயக்குனர் நிர்மல்சன், சேலம் மாநகர மக்கள் நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.