தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையிலிருந்து சேலம் வந்த மணப்பெண்ணுக்கு கரோனா தொற்று! - salem corona infection women hospital treatment

சேலம்: சென்னையிலிருந்து சேலம் வந்த மணப்பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கரோனா தொற்று
கரோனா தொற்று

By

Published : May 24, 2020, 5:49 PM IST

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்தைச் சேர்ந்த பெண் (26), சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் உறவுக்கார இளைஞருக்கும் ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது‌.

அதன்படி திருமணம் மே 21ஆம் தேதி, கரோனா பாதிப்பால் எளிமையாக முடிந்தது. இந்நிலையில் திருமணத் தம்பதி ஆத்தூர் வந்த போது, தலைவாசல் நத்தகரை சோதனைச் சாவடி மையத்தில் மருத்துவக் குழுவினர், அவர்களை பரிசோதனை செய்ததில், மணப்பெண்ணுக்குக் கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. பின் அப்பெண்ணுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட அலுவலர்கள் அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவர்கள் தொடர்புடைய நபர்களை பரிசோதனை செய்ததில் 12 பேரில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details