கேரளாவைச் சேர்ந்த தம்பதி சேலம் சூரமங்கலம் பகுதியில் தங்கி, கணவர் ஆத்தூரில் உள்ள ஐடிபிஐ வங்கியிலும், மனைவி சூரமங்கலம் பகுதியில் உள்ள சிண்டிகேட் வங்கியிலும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் கர்ப்பிணியான வங்கி ஊழியர் சென்ற வாரம் பொள்ளாச்சி வழியாக கேரளா சென்று பின் சேலம் திரும்பினார். அப்போது பாலக்காட்டில் வைத்து கர்ப்பிணி பெண்மணிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட சுகாதாரத் துறையினர் அந்தப் பெண் வசித்து வந்த சூரமங்கலம் புது சாலைப் பகுதிக்கு சீல் வைத்தனர்.
மேலும் அவரது கணவரைரும் ஆத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அப்பெண்மணி பணிபுரிந்து வந்த சிண்டிகேட் வங்கிக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கியில் பணியாற்றி வரும் சுமார் 60 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அந்த வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.