தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் 122 பேருக்கு கரோனா உறுதி! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: சேலத்தில் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,845ஆக உயர்ந்துள்ளது.

Corona guaranteed for 122 people in Salem today!
Corona guaranteed for 122 people in Salem today!

By

Published : Jul 26, 2020, 8:29 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 122 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,845ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை 2,045 பேர் சிகிச்சை முடிந்து விடு திரும்பியுள்ளனர். அதேசமயம் சேலம் மாவட்டத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details