கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழை வெளிப்படைத் தன்மையுடன் வழங்க வேண்டும் என சிறு, குறு தொழிற்சங்கத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று(மே.31) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனா தொற்றால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய், வைப்புத்தொகை, கல்விக்கான உதவியை அரசே ஏற்கும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், 10 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையை அறிவித்த பிரதமருக்கு சேலம் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில் நன்றி.
'கரோனா இறப்புச் சான்றிதழை வெளிப்படைத் தன்மையுடன் வழங்குக' - death certificate issue
சேலம்: கரோனா இறப்புச் சான்றிதழை வெளிப்படைத் தன்மையுடன் வழங்க வேண்டும் என மாவட்ட சிறு, குறு தொழிற்சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்க தலைவர்
அதேவேளையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சான்றிதழில் நிமோனியா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்று சான்றிதழ் வழங்கப்படுவதால், கரோனா தொற்றால் உயிரிழப்போரின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசின் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இதுதொடர்பாக ஒரு குழு அமைத்து, விசாரித்து 'கரோனா தொற்றால் உயிரிழந்தார்' என்று சான்றிதழ் வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.