தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, இன்று (ஆக.29) மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,332 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இன்று 432 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,248ஆக உயர்ந்துள்ளது.