சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு கரோனா தொற்று! - சேலம் கைதிக்கு கரோனா உறுதி
சேலம்: திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், மணிகண்டன் வீட்டின் அருகே வசித்துவந்த சின்னசாமி என்பவர் திருடியது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரைச் சிறையில் அடைப்பதற்கு முன்பாக கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட கொண்டலாம்பட்டி காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள் 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தினசரி காவல் நிலையப் பணிகள், காவல் நிலையத்தில் புகார்தாரர்கள் அமரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.