தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் நேற்று (ஜூலை19) ஒரே நாளில் 4 ஆயிரத்து 979 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
சேலத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா உறுதி- 4 பேர் உயிரிழப்பு! - கரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,295ஆக அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை19) ஒரே நாளில் மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,295ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அம்மாபேட்டை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.