தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிடா விருந்துக்கு சென்ற 46 பேருக்கு கரோனா உறுதி!

சேலம்: எடப்பாடி அருகே நடைபெற்ற கிடா விருந்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Corona confirms 46 people who went to function
கரோனா எண்ணிக்கை

By

Published : Aug 21, 2020, 4:42 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஜலகண்டாபுரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள், தங்களது உறவினர்களை அழைத்து கிடா விருந்து வைத்தனர். இதில், வெளி ஊர்களிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கிடா விருந்து குறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர், கரோனா பரவல் சூழ்நிலையில் விருந்தில் பங்கேற்றவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என 250க்கும் மேற்பட்டவர்களிடம் கரோனா பரிசோதனை செய்தனர். இதில், 46 பேருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிக்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிடா விருந்தில் கலந்து கொண்ட நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details