கரோனா தொற்று காலத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியமர்த்தப்பட்டனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு 34 செவிலியர், 50 உதவி செவிலியர் என மொத்தம் 84 பேர் பணியமர்த்தப்பட்டனர்.
தற்போது அவர்களின் ஒப்பந்த காலம் நிறைவடைந்தது. இந்நிலையில் ஒப்பந்த செவிலியர் மீண்டும் தங்களை பணியமர்த்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஒப்பந்த செவிலி ஒருவர் தெரிவித்ததாவது, "நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டி தனியார் மருத்துவமனைகளில் செய்துவந்த வேலையை விட்டு வந்தோம்.
சிறப்பு முகாமில் பணியாற்றியபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோம். தற்பொழுது வேலையில்லாமல் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு போராடிய செவிலியர்கள் நிரந்தர பணிக்கு போராடுகின்றனர்