தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்டதால் முதியவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்! - salem district collector office

சேலம்: முதியோர் உதவித் தொகை வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர்கள் திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

salem district news
salem district news

By

Published : Feb 9, 2021, 8:54 PM IST

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவி கேட்டு சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அரசு உதவித்தொகை பெற்றுத் தர அலுவலர்கள் லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது. வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியரின் உதவியாளர்கள், உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களிடம் ரூ.7ஆயிரம்லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து, இன்று(பிப்.9) சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் திருவோடு ஏந்தி லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து முதியவர்கள் கூறியதாவது, "கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் பாலு, வருவாய் அலுவலரின் உதவியாளர் சிவா மற்றும் வட்டாட்சியர் உதவியாளர் மணிகண்டன் ஆகிய மூவரும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை அலுவலர்களிடம் கொடுத்து கையெழுத்து பெற, விண்ணப்பித்தவர்களிடம் தலா ரூ.7 ஆயிரம் வீதம் லஞ்சம் கேட்கின்றனர்.

திருவோடு ஏந்தி முதியோர்கள் போராட்டம்

அடுத்தவேளை உணவிற்கே வழியில்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதால் தங்களால் லஞ்சம் கொடுத்து உதவித் தொகை பெற முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் லஞ்சம் கேட்போர் மீது நடவடிக்கை எடுத்து, உதவித்தொகை தர முன் வர வேண்டும்." என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இறுதி செய்யும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details