சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்து உள்ள செம்மாண்டப்பட்டி கொப்பத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அதிமுகவில் உறுப்பினராக உள்ள இவர், எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் தனி அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில்" சேலம் நடுப்பட்டியை சேர்ந்த மணி என்பவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட உதவியாளராக இருப்பதாகவும், அவர் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியதாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020 வரை மேச்சேரி அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்த சிவக்குமாரும், தானும் 25 பேரிடம் பணம் வசூல் செய்து அவரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
பல லட்சம் ரூபாய் மோசடி: எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது புகார் - எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் சிலர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
இதையும் படிங்க : கோடநாடு: மேல் விசாரணைக்குத் தடை கோரி வழக்கு