சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமம் அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் விஜய்சாரதி, ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் (EEE) படித்து வந்துள்ளார்.
வழக்கம் போல நேற்று கல்லூரிக்கு வந்த இவர், திடீரென கல்லூரி வளாகத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் கல்லூரிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாணவர் விஜய்சாரதியின் உடலை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.