மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுவருகிறது.
150 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்போன்கள் - rohini ias
சேலம்: மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 150 செல்போன்களை சேலம் ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்.
இந்த நிலையில் சேலத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 150 மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 1,300 ரூபாய் மதிப்பிலான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இலவச செல்போன்களை மாவட்ட ஆட்சியர் ரோஹணி இன்று வழங்கினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த செல்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்கள் தங்களின் விருப்பப்படி சிரமமின்றி எளிதில் பேச முடியும் என்றார்.