தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தல் பணியில் சேலம் மாவட்டத்தில்ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற 15.12.2019 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறகிறது. இதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் முன்னிலையில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.