சேலம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களின் பயிற்சிக்கும், வாக்காளர்களின் விழிப்புணர்வுக்காகவும் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 விழுக்காடு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு வைப்பறையில் இருந்து எடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
வாக்காளர் விழிப்புணர்வு, பயிற்சிக்காக வெளியே எடுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! - வாக்குப்பதிவு இயந்திரங்கள்
சேலத்தில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக இருப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு ஆய்வு செய்து தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் ராமன் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அலுவலர்களின் பயிற்சிக்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தலா 214 வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியில் எடுத்து தொகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். பின்னர், வாக்குப்பதிவு இயந்திர இருப்பு அறை மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்பு வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு - அன்புமணி நம்பிக்கை