தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டபேரவைத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அரவக்குறிச்சியில் இன்று முதல்வர் பரப்புரை - நாளை முதல்வர் பரப்புரை
சேலம்: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதில், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு இன்று காலை வருகிறார். சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று உணவை முடித்துவிட்டு, பகல் 2 மணிக்கு மேல் கார் மூலம் அரவக்குறிச்சியில் பரப்புரையில் தொடங்க உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் காவல்துறையினரால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.