சேலம்: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜேந்திரன் என்னும் ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மறைவிற்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணிக்குச் சேலம் வருகிறார்.