தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் சட்டக் கல்லூரி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு - சேலம்

சேலம்: சட்டக் கல்லூரி இந்த ஆண்டு முதல் சேலத்தில் தொடங்கப்பட்டு செயல்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm

By

Published : Jul 22, 2019, 3:02 PM IST

தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 112 கோடி மதிப்பீட்டில் பயிர்க் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு கடன், தொழில் கடன் ஆகியவற்றை வழங்கினார்.

சேலத்தில் சட்டக் கல்லுாரி-முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு
இந்த விழாவில் முதலமைச்சர் கூறுகையில், 'உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் வங்கிகள் இணைப்பு நடைபெற்றுவருகிறது. மத்திய அரசின் முயற்சியால் இந்தியா முழுவதும் 196 ஊரக வங்கிகள், 145 பொதுத்துறை வங்கிகளாக இணைக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் புதிய சட்ட கல்லூரி தொடங்கப்படும்; அது இந்த கல்வி ஆண்டு முதல் இயங்கும்' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details