தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் தரிசனம்... துரிதமாக பெறப்பட்ட மனுக்கள் - இது முதலமைச்சரின் சொந்த ஊர் விசிட் - cm Palaniswami arrives salem

சேலம்: சிலுவம்பாளையம் வந்த முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டார்.

cm-palaniswami-arrived-salem-and-received-petitions-from-people
சேலம் வந்த முதல்வர் 100க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டார்

By

Published : Feb 25, 2020, 2:56 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து கார் மூலம் சேலம் வந்தார். பின்னர் மாலையில் சேலம் மூன்று ரோடு அருகே உள்ள வரலட்சுமி மஹால் மைதானத்தில் நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதலமைச்சர் பழனிசாமி, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் எடப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், தமது எடப்பாடி தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு அவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து அவற்றுக்கு உரிய தீர்வுகளை உடனே செய்யவேண்டுமென்று தொடர்புடைய அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி பயணியர் மாளிகையில் அதிமுக கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசினார்.

அதையடுத்து அங்கிருந்து சிலுவம்பாளையம் புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை சேலம் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்து, நாளை காலை தஞ்சாவூருக்கு கார் மூலம் வேறொரு விழாவில் பங்கெடுக்க புறப்பட்டுச் செல்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

100க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர்

இதையும் படிங்க:முதலமைச்சர் வருகை: இஸ்லாமியர்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details