சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்து தாரமங்கலம் வழியாக சங்ககிரி செல்லும் லாரிகள், வாகனங்களால் தாரமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 5.4 ஹெக்டேர் நிலம் தாரமங்கலம் புறவழிச் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்டது.
தாரமங்கலம் புறவழிச் சாலையை திறந்துவைத்த பழனிசாமி! - CM Edappadi
சேலம்: தாரமங்கலம் பகுதியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
![தாரமங்கலம் புறவழிச் சாலையை திறந்துவைத்த பழனிசாமி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3902615-thumbnail-3x2-cm.jpg)
CM
மொத்தம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த புறவழிச் சாலையின் திட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள இந்த புறவழிச் சாலையானது பெரியாம்பட்டியில் தொடங்கி துட்டம்பட்டியில் முடிவடைகிறது. இந்தச் சாலையானது 14.5 மீ அகலமும், 1.20 மீ மைய தடுப்புடன் கூடிய நான்கு வழிச்சாலை ஆகும்.