சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதையடுத்து தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களாக, அவர்கள் பகுதியில் உள்ள குறைகளைப்பேசினர்.
அப்பொழுது திடீரென அதிமுக கவுன்சிலர்கள், சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்தைத் தனியாருக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக்கூறி, எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை ஆதரித்து திமுக கவுன்சிலர்கள் திட்டம் வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அதற்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் மாமன்றக்கூட்டத்தில் தரையில் அமர்ந்து இந்த திட்டம் வேண்டாம் என்று முழக்கங்கள் எழுப்பினர்.