தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெல்மெட் அணிந்தால் சாக்லேட்; அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் - நடைமுறைக்கு வந்த மோட்டார் சட்டம் - salem district traffic police

சேலம் மாவட்ட காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு சாக்லேட்டும், அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதமும் விதித்து புதிய மோட்டார் சட்டத்தை அமல் படுத்தியுள்ளனர்.

Etv Bharatஹெல்மட் அணிந்தால் சாக்லேட்! அணியாவிட்டால் 1000 அபராதம் -  நடைமுறைக்கு வந்த மோட்டார் சட்டம்
Etv Bharatஹெல்மட் அணிந்தால் சாக்லேட்! அணியாவிட்டால் 1000 அபராதம் - நடைமுறைக்கு வந்த மோட்டார் சட்டம்

By

Published : Nov 3, 2022, 5:14 PM IST

சேலம் மாவட்டத்தில் இன்று (நவ-3)போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய அபராதத்தொகை அமலுக்கு வந்தது. இதனையடுத்து சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் காவல் துறையினர் விதித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் நோக்கில் இன்று (நவ-3)சேலத்தில் போக்குவரத்து விதியை பின்பற்றாதவர்களுக்கு அபராதத்தொகை விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சேலம் மாநகர் ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, ரயில்வே ஜங்ஷன் , சீலநாயக்கன்பட்டி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதவர்களை நிறுத்தி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல நான்கு சக்கர வாகனமான கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வருபவர்களையும் நிறுத்தி, அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணிந்தால் சாக்லேட்; அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் - நடைமுறைக்கு வந்த மோட்டார் சட்டம்

மேலும் போக்குவரத்து காவலர்கள் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒலிப்பெருக்கி மூலம் புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை பற்றியும்; அபராதத்தொகையை பற்றியும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் அதிருப்தி;அபராதம் செலுத்திய வாகன ஓட்டிகள் கூறுகையில், அதிக அளவில் புதிய அபராதம் உள்ளதாகவும் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தாங்கள் ஹெல்மெட்டிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டால் எப்படி என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அவர்கள் அதிகபட்சமாக ரூ.500 வரை அமல்படுத்தாமல், ஒரே அடியாக ஆயிரம் ரூபாய் உயர்த்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் காவலர்கள் அபராதம் விதிப்பதற்கு மாறாக ஹெல்மெட்டை வழங்கினால் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம் என்று கூறினர்.

இதையும் படிங்க:அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் என அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details